×

ஓவியா பாய்பிரண்டுடன் நடிக்கும் காவ்யா

நடிகை ஓவியாவின் நெருக்கமான பாய்பிரண்ட் நடிகர் ஆரவ். இவர் மார்க் கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். வசூல் ராஜா எம்பிபிஎஸ், அமர்க்களம், காதல் மன்னன் போன்ற படங்களை இயக்கிய சரண் இயக்குகிறார். எஸ்.மோகன் தயாரிக்கிறார். சைமன் கே.கிங் இசை அமைக்கிறார். படம் பற்றி சரண் கூறும்போது,’கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்துக்கு முதலில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்றுதான் டைட்டில் வைக்கப்பட்டது.

பின்னர் அது மாற்றப்பட்டு வசூல் ராஜாவானது. மார்க்கெட் ராஜா டைட்டில் அப்படியே இருந்தநிலையில் அதற்கு பொருத்தமாக கதை ரெடியானது. மார்க்கெட்டில் ரவுடித்தனம் செய்யும் தாதா ஒருவன் உடம்பில் கோழையான நபர் ஒருவரின் ஆவி புகுந்துவிடுகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக, கமர்ஷியலாக படம் சொல்கிறது.

ஹீரோயினாக நடிக்க அழகும், அப்பாவித்தனமும் நிறைந்த ஒரு ஹீரோயின் தேவைப்பட்டார். பாலிவுட் நடிகை காவ்யா தபார் தேர்வானார். பிரதான கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். இவர்களுடன் விஹன், சாயாஜி ஷிண்டே, முனிஸ்காந்த், ஆதித்யா, சாம்ஸ், ரோகிணி, தேவதர்ஷினி உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதே படநிறுவனத்துக்கு மேலும் 2 படங்கள் இயக்க உள்ளேன்’ என்றார்.

Tags : Kavya ,Oviya Boyfriend ,
× RELATED விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்