×

பிரியா வாரியர் கேரக்டர் - ரகுல் பிரீத் கண்டிஷன்

தெலுங்கில் பிசியாக நடித்து வந்த ரகுல் பிரீத் சிங், தமிழில் அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார். இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதே படத்தில் மற்றொரு ஹீரோயினாக பிரியா வாரியர் நடிக்க உள்ளார். இவர் ஒரு அடார் லவ் மலையாள படத்தில் நடித்த அதே புருவ அழகி தான். அவர் படத்தில் நடிப்பதை அறிந்து ரகுல் பிரீத் அதிர்ச்சி அடைந்தாராம். பிரியாவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்படும் என நினைத்து இதில் நடிக்க தயக்கம் காட்டியுள்ளார்.

கதைப்படி நீங்கள்தான் லீட் கேரக்டர் என இயக்குனர் சொல்லியும் ரகுல் கேட்கவில்லையாம். சில பல கண்டிஷன்கள் அவர் போட்டிருக்கிறார். அதில் தனது கேரக்டருக்கே முக்கியத்துவம் தர வேண்டும், பாடல் காட்சிகளும் தனக்கே அதிகம் வேண்டும் உள்பட நிபந்தனைகளை விதித்துள்ளார். அதையெல்லாம் இயக்குனர் தரப்பு ஏற்ற பிறகே நடிக்க சம்மதித்துள்ளார் ரகுல்.

Tags : Priya Warrior Character - Rakul Breath Condition ,
× RELATED மேகா ஆகாஷுக்கு சல்மான் கான் சிபாரிசு