×

மேக்அப் போட்டாச்சு ஷூட்டிங்தான் ஆரம்பிக்கல... ஜெயலலிதா வாழ்க்கை படம் தாமதம் ஏன்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கப்போவதாக 4 இயக்குனர்கள் அறிவித்தனர். அவர்களில் இயக்குனர்கள் விஜய், பிரியதர்ஷினி இருவரும் ஜெயலலிதாவாக நடிக்கப்போகும் நடிகையையும், படத்துக்கான டைட்டிலையும் தேர்வு செய்துவிட்டனர். விஜய் இயக்கும் படத்துக்கு தலைவி என பெயரிடப்பட்டதுடன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரனாவத் தேர்வாகியிருக்கிறார்.

பிரியதர்ஷினி படத்துக்கு தி அயர்ன் லேடி என பெயரிடப்பட்டு ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யாமேனன் தேர்வாகியிருக்கிறார். கங்கனா, நித்யா இருவருக்குமே ஜெயலலிதாபோல் மேக் அப் அணிந்து பார்த்து மேக் அப் டெஸ்ட் ஓ.கே ஆனது. படம் தொடங்குவதாக அறிவித்து ஒரு வருடம் ஆகப்போகிறது. ஆனால் இரண்டு படத்துக்கும் இன்னும் படப்பிடிப்புதான் ஆரம்பிக்கவில்லை.

பிரியதர்ஷினி இயக்கத்தில் நடிக்கும் நித்யாமேனனிடம் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றபோது,’ஜெயலலிதா வரலாறாக உருவாகவிருக்கும் தி அயர்ன் லேடி மிகப் பெரிய படைப்பு. அதற்கான எல்லா பணிகளையும் முழுமையாக செய்துவிட்டுத்தான் படப்பிடிப்பை தொடங்க முடியும். இதில் இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெறுவதால் அந்த வேடங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும். இயக்குனர் பிரியதர்ஷினியின் எண்ணங்களுக்கு நான் துணையாக இருப்பேன்’ என்றார். ஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்க உள்ளதாக பாரதிராஜா, கவுதம் மேனன் ஆகியோரும் அறிவித்திருந்தனர். கவுதம் மேனன் இதனை வெப் சீரியலாக இயக்க உள்ளார். பாரதிராஜா எப்போது படப்பிடிப்பு தொடங்குவார் என்பது பற்றிய தகவல் இன்னும் உறுதியாகவில்லை.

Tags : Jayalalithaa ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...