×

ஹன்சிகாவுக்கு ரூ.10 கோடி கார் பரிசு..

நடிகை ஹன்சிகாவை திரையில் அடிக்கடி பார்க்க முடியாவிட்டாலும் வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களாவது அவர் நடிப்பில் வெளியாகிவிடுகிறது. கடந்த ஆண்டு குலோபகாவலி, துப்பாக்கி முனை. இந்த ஆண்டில் அதர்வாவுடன் நடித்த 100 போன்ற படங்கள் வெளியாகின. தற்போது மகா, பார்ட்னர் உள்ளிட்ட 4 படங்களில் நடித்து வருகிறார்.

ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானி டாக்டராக இருக்கிறார். தீபாவளிக்கு பிள்ளைகளுக்கு புத்தாடை, பட்டாசு வாங்கி கொடுப்பதுண்டு. ஆனால் மோனா தனது மகள் ஹன்சிகாவுக்கு விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கி பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு ரூ.10 கோடியாம்.

Tags : Hansika ,
× RELATED கார்டியன் விமர்சனம்…