×

3 முறை கதை கேட்கும் ராஷ்மிகா

கன்னடத்தில் நடித்து வந்த ராஷ்மிகா, தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து ஒரே இரவில் பிரபலம் ஆனார். அடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த டியர் காம்ரேட் தமிழ், தெலுங்கு இருமொழியில் வெளியானது. தற்போது தமிழில் சுல்தான் படத்தில் நடிக்கிறார். ராஷ்மிகா குறுகிய காலத்தில் இயக்குனர்களை கவர்ந்ததுபோவே ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.

அதற்கு காரணம் அவர் தேர்வு செய்யும் கதை மற்றும் கதாபாத்திரங்கள்தான் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நாக சைதன்யாவுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படத்தை புது இயக்குனர் சசி என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் கதையை ஏற்கனவே இரண்டு முறை ராஷ்மிகா கேட்டிருக்கிறார். ஆனாலும் நடிக்க ஒப்புதல் தராமல் மீண்டும் ஒருமுறை கதையை சொல்லும்படி இயக்குனரிடம் கேட்டிருக்கிறார்.

Tags : Rashmika ,times ,
× RELATED கூகுளில் அதிகம் தேடப்பட்ட ராஷ்மிகா