×

சில்க் ஸ்மிதாவோட ஜெராக்ஸ்

கடந்த 1980களில் சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே இல்லை என்றளவுக்கு கவர்ச்சி ஆட்டங்களில் சுழன்றடித்துக்கொண்டிருந்தார். அவரது ஆட்டம் இருந்தால்தான் பிஸ்னஸ் என்ற நிலையும் உருவானது. ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் அந்த காலகட்டத்தில் நடித்த சில்க் ஸ்மிதா திடீரென்று ஒரு நாள் தற்கொலை செய்துகொண்டு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவான தி டர்ட்டி பிக்சர் படத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். அப்படமும் வரவேற்பை பெற்றது.
கவர்ச்சி நடிகையாக சில்க் ஸ்மிதா திரையுலகில் உச்சத்தை தொட்டதுபோல்வேறு எந்த கவர்ச்சி நடிகையும் அதுபோன்ற ஒரு உச்சத்தை எட்டவில்லை.

கடந்த சில நாட்களாக இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகிக்கொண்டிருக்கிறது. சில்க் ஸ்மிதா போன்ற முகதோற்றம் கொண்ட ஒரு பெண், ‘அடுத்த வாரிசு’ படத்தில் ரஜினியுடன் சில்க் ஸ்மிதா பாடி ஆடும், ‘பேசக்கூடாது..’ நீங்கள் கேட்டவை படத்தில் இடம்பெறும் “அடியே மனம்” என்ற பாடல் பின்னணியில் கிக்கான பார்வை பார்க்கிறார். அதை கண்டவர்கள் சில்க் ஸ்மிதா ஞாபகத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கிறார்களாம்.

Tags : Xerox ,Silk Smitha ,
× RELATED மார்க் ஆண்டனி சில்க் சொன்ன சர்ப்ரைஸ்..!