×

சனம் ஷெட்டிக்கு ஆபரேஷன்

அம்புலி, சவாரி படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. இப்போது ஹன்சிகாவுடன் மகா, சிபிராஜுடன் வால்டர் படங்களில் நடித்து வருகிறார். கையில் ஏற்பட்ட கட்டி ஒன்றால் அவர் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டார்.

அங்கு ஆபரேஷன் மூலம் கட்டி அகற்றப்பட்டது. இது பற்றி சமூக வலைத்தளத்தில் சனம் ஷெட்டி கூறும்போது, ‘குடும்பத்தார், நண்பர்களின் அன்பால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறேன். ஆதரவளித்த ரசிகர்களுக்கும் நன்றி’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Sanam Shetty ,
× RELATED நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் திருச்சி மாணவன் சிக்கினான்