×

ஹாலிவுட்டில் ஜி.வி.பிரகாஷ்

ஹாலிவுட் ஒரு காலத்தில் எட்டாக்கனியாக இருந்தது. ஆனாலும் ரஜினிகாந்த் பிளட்ஸ்டோன் படம் மூலம் ஹாலிவுட் படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு, தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் தி ஃபகிர்’ ஹாலிவுட் படத்தில் நடித்தார் தனுஷ். பாரதி ராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். நேரம் கிடைக்கும்போது தமிழ் படத்தில் நடிக்கிறார். அதேநேரம் ஹாலிவுட் படத்திலும் கால் பதித்திருக்கிறார்.

கிறிஸ்த்மஸ் கூப்பன் படம் மூலம் ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார் நெப்போலியன். இப்படத்தை டெல் கணேசன் தயாரிக்கிறார். அவரது தயாரிப்பில் உருவாகும் ஹாலிவுட் புதிய படத்தில் தற்போது நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் இசை அமைப்பாளரும். நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார். ரிக்கி புர்செல் இயக்குகிறார். பிராண்டன் டி. ஜாக்ஸன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

Tags : GV Prakash ,Hollywood ,
× RELATED ஐஸ்வர்யா சிபாரிசு செய்ததால் நடிக்க பயந்தேன்: ஜி.வி.பிரகாஷ்