மோகன்லால் ஜோடியாக திரிஷா

மோகன்லால் ஜோடியாக மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார் திரிஷா. ஒரு சமயத்தில் திரிஷாவுக்கு மலையாள பட வாய்ப்புகள் வந்தபோது, அதை நிராகரித்து வந்தார். அப்போது தமிழ், தெலுங்கில் திரிஷா பிசியாக இருந்ததும் அதிக சம்பளம் கேட்டதும் மலையாள சினிமாவை ஒதுக்க காரணமாக இருந்தது. ஓரிரு ஆண்டுகளாக தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. தமிழில் ஒரு சில படங்களில் நடிக்கிறார். இதனால் கடந்த வருடம் மலையாளத்தில் நடிக்க கேட்டதும் ஒப்புக்கொண்டார். ஹே ஜூட் என்ற மலையாள படத்தில் அவர் நடித்தார்.

படம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ஜீது ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தில் நடிக்க அவரை கேட்டுள்ளனர். மோகன்லாலுக்கு ஜோடியாக அவரது கேரக்டர் இருக்குமாம். இதில் நடிக்க திரிஷா சம்மதிப்பார் என கூறப்படுகிறது. திரிஷ்யம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜீது ஜோசப் இயக்கத்தில் மீண்டும் மோகன்லால் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>