கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டில் நடிக்கச் சென்றவர் நடிகை சார்மி. இயக்குனர் புரி ஜெகநாத்துடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வந்தார். தற்போது இருவரும் நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றனர். புரி ஜெகநாத் இயக்கும் படங்களின் நிர்வாக, தயாரிப்பு பணிகளை சார்மி கவனித்து வருகிறார்.
புரி இயக்கத்தில் ஐ ஸ்மார்ட் தெலுங்கு படம் 2 நாட்களுக்கு முன் வெளியானது. ஏற்கனவே அவரது படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறாததால் இப்படமும் அதேபோல் தோல்வியை தழுவக்கூடும் என்று எண்ணப்பட்டது.
ஆனால் படம் வெளியாகி ஹிட்டானதுடன் 3 நாட்களில் படத்துக்கு செலவு செய்யப்பட்ட தொகை திரும்பி வந்தது. இனிமேல் வருவது லாபம் என்பதால் புரி, சார்மி சந்தோஷத்தில் மூழ்கினர். சந்தோஷத்தை கொண்டாட நைட் பார்ட்டி வைக்கப்பட்டது. இதில் படத்தில் நடித்த நடிகர் ராம் பொத்திநேனி, நடிகைகள் நபஹா நடேஷ், நிதி அகர்வால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் கலந்துகொண்டார். அவர் எல்லை மீறி விழாவில் நடந்துகொண்டது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
பீர் பாட்டிலை எடுத்து கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போட்டவர் திடீரென்று சார்மி, நிதி அகர்வால், நபா ஆகியோர் தலையில் பீர் அபிஷேகம் செய்ததுடன் தனது தலையிலும் பீர் ஊற்றிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். எதிர்பாராத வகையில் தங்கள் மீது பீர் கொட்டப்பட்டதால் நடிகைகள் தர்ம சங்கடத்துக்கு ஆளானார்கள். அதைப்பொறுத்துக்கொண்டு அவர்கள் பீர்வாடையுடனேயே கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். பிறகு சார்மியை நோக்கி சென்ற வர்மா அவரை இறுக்கமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.