தளபதி விஜய் ரசிகர்களுக்கு இன்பச்செய்தி... தளபதி 63 அப்டேட் இன்று வெளியீடு

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து ஷூட்டிங் ஸ்டில், விஜய் ஸ்டில்கள் அவ்வப்போது லீக் ஆனது. இந்நிலையில் படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாளின்போது வெளியாகும் என்று தெரிகிறது.

சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனாவிடம் ஃபர்ஸ்ட்லுக் பற்றி அப்டேட் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கேட்ட வண்ணமிருக்கின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தளபதி 63 படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.

Tags : Vijay ,fans ,Commander ,
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி