கடல் தாண்டிய தனுஷ்

ஹாலிவுட்டில் உருவான ‘தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் தி ஃபகிர்’ ஆங்கில படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். கென் ஸ்காட் இயக்கி உள்ளார். பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெளியாகி வரவேற்பை பெற்றதுபோல் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து நெட்டில் இயக்குனர் கென் பகிர்ந்திருக்கும் தகவலில்,’தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் தி ஃபகிர், ஸ்பெயினில் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அங்கு தனுஷின் நடிப்புக்கு ரசிகர்கள் உருவாகிவிட்டனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார். கடல் தாண்டியும் தனக்கு ரசிகர்கள் உருவாகியிருப்பதை இயக்குனரின் டுவிட் மூலம் அறிந்த தனுஷ், கென் ஸ்காட்டுக்கு நன்றி தெரிவித்து ‘இந்த வெற்றி உங்களால் சாத்தியமாகியிருக்கிறது’ என மகிழ்ச்சி பகிர்ந்திருக்கிறார்.

Tags : Dhanush ,sea ,
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி