×

மன்னிப்பு கேட்ட ராசி கன்னா

இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்த ராசி கன்னா, தற்போது சைத்தான் கா பச்சா, சங்கத்தமிழன், கடைசி விவசாயி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷால் ஜோடியாக அவர் நடித்து இருந்த அயோக்யா ரிலீசானது. இதில் அவருக்கு டப்பிங் கலைஞரும், ஒரு கிடாயின் கருணை மனு ஹீரோயினுமான ரவீணா ரவி டப்பிங் பேசியிருந்தார். ஆனால், அவரது பெயர் படத்தின் டைட்டிலில் இடம்பெறவில்லை. இதுகுறித்து தனது வருத்தத்தை சமூக வலைத்தளத்தில் ரவீணா பதிவு செய்திருந்தார்.

அதைப் பார்த்து அதிர்ந்த ராசி கன்னா, அவரிடம்  மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மிகவும் வருத்தப்படுகிறேன் ரவீணா. உங்கள் இனிமையான குரலை இப்படத்தில் எனக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. எனது நடிப்பு நன்கு ரசிக்கும் அளவுக்கு இருந்ததற்கு உங்கள் குரல்தான் முக்கிய காரணம்’ என்றார். அதற்கு பதில் அளித்த ரவீணா, ‘மன்னிப்பு  தேவை இல்லை. இது உங்கள் தவறு அல்ல. டப்பிங் கலைஞர்களுடைய பெயர் விடுபட்டது வருத்தம் அளிக்கிறது’ என்றார்.

Tags : Razi Khanna ,
× RELATED பிதா திரைப்பட அறிவிப்பு விழா!!