×

இரும்புத்திரை 2-வில் சமந்தா இடத்தை பிடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த ஆணடு வெளியாகிய படம் இரும்புத்திரை. விஷாலுடன், சமந்தா, அர்ஜுன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பும், வெற்றிப்படமாக அமைந்தது. இதனையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்றது. இரும்புத்திரை இரண்டாம் பாகத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கவில்லை.

அவருக்கு பதிலாக இயக்குநர் எழிலின் முன்னாள் உதவியாளர் ஆனந்த் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஷால் ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த சமந்தாவுக்கு பதில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்ரீரத்த ஸ்ரீநாத் தற்போது தல அஜித் நடிப்பில் உருவாகும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Strada Srinath ,Samantha ,
× RELATED எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி