×

ஜெயம் ரவியின் 25-வது படத்தில் கதாநாயகியாக டாப்சி?

ஜெயம் ரவியின் 25-வது படத்தில் டாப்சி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரோமியோ ஜுலியட், போகன் படத்தை இயக்கிய லட்சுமண் மூன்றாவது முறையாக இந்த கூட்டணி அமைந்துள்ளது.  அடங்கமறு படத்தை தயாரித்த ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் இந்த படத்தை தயாரிக்கிறார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தெரிகிறது. படத்தில் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடுகளம் படத்துக்கு பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாப்சிக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் இந்தியில் நடிக்க சென்றார். அங்கு தனக்கென்று முக்கியமான இடத்தை பிடித்திருக்கும் டாப்சி, தமிழில் ரீ என்ட்ரியாக ‘கேம் ஓவர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஜெயம் ரவியுடன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Taapsee ,Jayam Ravi ,
× RELATED காதலிக்க நேரமில்லை ஷூட்டிங் முடிந்தது