×

ஜெயலலிதா வேடம் ஏற்க மறுத்த வித்யாபாலன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை தலைவி பெயரில் இயக்குனர் விஜய் டைரக்ட் செய்கிறார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். முன்னதாக ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வித்யாபாலனிடம் பேச்சு நடந்தது. அநேகமாக அவர் ஜெயலலிதா வேடம் ஏற்பார் என்றும் கூறப்பட்டது. கடைசி நேரத்தில் ஜெயலலிதா வேடத்தை ஏற்காமல் அவர் விலகினார். அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி வேடம் ஏற்று வெப் சீரியலில் நடிக்க உள்ளார் வித்யாபாலன். இதை வித்யாவின் கணவர் சித்தார்த் ராய் கபூர் தயாரிக்கிறார். இந்திராகாந்தி வேடத்தில் நடிக்கும்போது வேறு எந்த திசை திருப்பமும் தனக்கு இருக்கக்கூடாது என்பதாலேயே ஜெயலலிதா வேடத்தை அவர் ஏற்கவில்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இந்திரா காந்தி உடல்மொழி மற்றும் அவரது பேச்சு ஸ்டைல் போன்றவற்றை கற்பதற்கான பயிற்சியில் வித்யா ஈடுபட்டிருக்கிறார். முன்னதாக இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க மனிஷா கொய்ராலாவிடம் பேசப்பட்டு வந்தது. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் அந்த படம் ஏதோ சில காரணங்களால் தொடங்கப்படவில்லை.

Tags : Vidyapalan ,Jayalalithaa ,
× RELATED ஜெயலலிதாவை அண்ணாமலை புகழ்வதில் உள்நோக்கம்: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்