சென்னை: நடிகை சாய் பல்லவி திடீரென காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டார். கடைசியாக தமிழில் ‘அமரன்’ படத்தில் சாய் பல்லவி நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெற்றதால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார். இப்போது தெலுங்கில் நாக சைதன்யாவுடன் தண்டேல் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே காசியில் உள்ள விஸ்வநாதர் கோயிலுக்கு சென்ற சாய் பல்லவி அங்கு தனது பெற்றோருடன் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டார்.
சாய் பல்லவி, சிவன் பக்தை அதனாலேயே அவர் அந்த கோயிலுக்கு சென்றதாக சிலர் கூறுகிறார்கள். அதே சமயம், தனது தங்கைக்கு திருமணமாகிவிட்ட நிலையில் தானும் திருமணம் செய்துகொள்ள அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜோசியர் ஒருவரின் அறிவுறுத்தல்படியே அவர் காசி கோயிலுக்கு சென்று பரிகாரங்கள் செய்திருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து விசாரித்ததில், ‘கோயிலுக்கு சென்றது அவரது தனிப்பட்ட விஷயம். அது பற்றி அவர் விளக்கம் தர வேண்டியதில்லை’ என ெதரிவிக்கப்பட்டது.