×

பாலிவுட் ஹீரோவுடன் கீர்த்தி சுரேஷ் நெருக்கமான போட்டோ ஷூட்: ரசிகர்கள் கடும் விமர்சனம்

மும்பை: பாலிவுட் ஹீரோ வருண் தவனுடன் நெருக்கமான போட்டோ ஷூட் வெளியிட்ட கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இயக்குனர் அட்லி தயாரிப்பில் ‘பேபி ஜான்’ என்ற இந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதில் வருண் தவனுக்கு அவர் ஜோடி. படத்தில் ஒரு பாடல் காட்சியில் படு கிளாமராக டான்ஸ் ஆடி கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில் கீர்த்திக்கு அவரது காதலர் ஆண்டனியுடன் கடந்த டிசம்பர் 12ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இப்போது பேபி ஜான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கழுத்தில் தாலியுடன் பங்கேற்கும் கீர்த்தி சுரேஷ், படு கவர்ச்சியான உடைகளில் காணப்படுகிறார். அத்துடன் நேற்றுமுன்தினம் போட்டோ ஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். அதில் வருண் தவனுடன் அவர் படு நெருக்கமாக போட்டோக்களுக்கு போஸ் தந்துள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

‘பேபி ஜான் படத்தில் பாடல் காட்சியில் எல்லை மீறி நடித்ததை கூட பொருத்துக் கொள்ளலாம். காரணம், அது இந்தி படம். அதன் வியாபாரத்துக்காக இப்படி செய்தீர்கள் எனலாம். ஆனால் திருமணமான பிறகு, வருண் தவனுடன் இதுபோல் போஸ்கள் தருவது ஏன்?’ என ரசிகர்கள் கேள்வி கேட்டு கீர்த்தி சுரேஷை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இது பற்றி கீர்த்தி தரப்பு கூறும்போது, ‘இது அவரது வேலை. வேறு கண்ணோட்டத்துடன் இதை பார்க்கக் கூடாது’ என தெரிவித்துள்ளனர்.

Tags : Keerthy Suresh ,Bollywood ,Mumbai ,Varun Dhawan ,Atlee ,
× RELATED திருமணம் முடிந்த நிலையில் பார்ட்டி:...