விஜய் படங்களிலேயே உங்களுக்கு பிடித்த படம் எது என சமீபத்தில் ராஷ்மிகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘கில்லி படம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்’ என பதில் அளித்தார். அத்துடன் அவர் நின்றிருக்கலாம். ‘கில்லி படம், தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான போக்கிரி படத்தின் ரீமேக்’ என சொல்லிவிட்டார். உடனே விஜய் ரசிகர்கள் கொதித்துவிட்டனர். ‘உண்மையிலேயே கில்லி படத்தை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அது போக்கிரி படத்தின் ரீமேக் என சொல்வதால் எங்களுக்கு சந்தேகம் வலுக்கிறது. அது போக்கிரி பட ரீமேக் கிடையாது.
ஒக்கடு படத்தின் ரீமேக் ஆகும். போக்கிரி தெலுங்கு படத்தை போக்கிரி என்ற பெயரிலேயே விஜய் ரீமேக் செய்திருந்தார்’ என்றெல்லாம் ராஷ்மிகாவை ட்ரோல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். உடனே உஷாரான ராஷ்மிகா, ‘தவறுதலாக போக்கிரி ரீமேக் என சொல்லிவிட்டேன். பெரிய மனது பண்ணி மன்னிச்சிடுங்க’ என அன்போடு கேட்டதும் ரசிகர்களும் அவரை மன்னிப்பதாக சொல்லி ஹார்ட் எமோஜிகளை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள்.