×

பாப்கார்னுக்கு 18 சதவீத வரி ராம்கோபால் வர்மா கோபம்

மும்பை: பாப்கார்னுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி போட்டால் யார் தியேட்டருக்கு வருவார்கள் என கேட்டிருக்கிறார் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இது குறித்து அவர் கூறும்போது, ‘ஏற்கனவே தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த நேரத்தில் ஜிஎஸ்டி வரியை பாப்கார்னுக்கு 18 சதவீதம் என ஒன்றிய அரசு விதித்துள்ளது. மக்கள் அதிகம் தியேட்டருக்கு வராமல் போனதற்கு காரணமே, இந்த பாப்கார்ன் விலைதான். இப்போது அதை மேலும் உயர்த்திவிட்டதால் வந்துகொண்டிருக்கும் குறைந்த ஜனமும் வராது’ என கோபமாக ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

Tags : Ram Gopal Varma ,Mumbai ,
× RELATED ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட...