×

8 மாதங்களில் உருவான ஜின் உருவம்: இயக்குனர் டி.ஆர்.பாலா

சென்னை: முகேன் ராவ், பவ்யா திரிகா, பாலசரவணன், ராதாரவி, இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய், ரித்விக் நடித்துள்ள படம், ‘ஜின்’. இதை ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்‌ஷன்ஸ், விஜிவி கிரியேஷன்ஸ், சினிமா ரஸா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டி.ஆர்.பாலா, அனில் குமார் ரெட்டி, வெங்கடாச்சலம் இணைந்து தயாரித்துள்ளனர். அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவு செய்ய, கருந்தேள் ராஜேஷ் திரைக்கதை எழுதியுள்ளார்.

விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர். விவேகா, கு.கார்த்திக், விஷ்ணு எடவன் பாடல்கள் எழுதியுள்ளனர். படம் குறித்து இயக்குனர் டி.ஆர்.பாலா கூறியதாவது: 4.5 கோடி வியூஸைக் கடந்து இணையத்தில் வெற்றி பெற்ற ‘ஒத்த தாமரை’ என்ற பாடலை இயக்கிய நான், ‘ஜின்’ படத்தை இயக்கியுள்ளேன். சென்னை, ஐதராபாத், மும்பை, கொசசியிலுள்ள டெக்னீஷியன் களின் 8 மாத உழைப்பில் ‘ஜின்’ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தில் 40 நிமிடங்கள் இடம்பெறும் ‘ஜின்’ கதாபாத்திரத்தின் அட்டகாசங்கள் அனைத்து தரப்பினரையும் கவரும். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், மலேசியாவை கதைக்களமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘குட்டிமா…’ என்ற ஒரு பாடல் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது. ‘ஜின்’ என்பது பேய் அல்ல, அது அமானுஷ்ய சக்தியின் இன்னொரு வடிவம். நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும். அது நாம் பயன்படுத்துகின்ற தன்மையைப் பொறுத்தது.

Tags : Jin ,D.R. Bala ,Chennai ,Mugen Rao ,Bhavya Trika ,Balasaravanan ,Radharavi ,Iman Annachi ,Nandu Anand ,Vadivukkarasi ,Nizhalgal Ravi ,Vinothini Vaidyanathan ,George Vijay ,Rithvik ,Fairy Tale Pictures ,AR Touring Talkies Productions ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...