×

3வது குழந்தைக்கு கணவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை: அனசுயா ஓப்பன் டாக் ரசிகர்கள் அதிர்ச்சி

ஐதராபாத்: தெலுங்கு டி.வியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த அனசுயா பரத்வாஜ் (39), தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். ‘புஷ்பா 1: தி ரைஸ்’, ‘புஷ்பா 2: தி ரூல்’ ஆகிய படங்களில் வில்லியாக நடித்திருந்த அவர், தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். தனது கிளாமர் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர், மலை யாளம் மற்றும் தமிழிலும் நடித்து வருகிறார்.

தெலுங்கு டி.வி நிகழ்ச்சிஒன்றில் கவர்ச்சியாகத் தோன்றி, நிகழ்ச்சிகளை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்குகிறார். இந்தநிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், படுக்கை அறை விஷயம் குறித்து பப்ளிக்காக பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.  கடந்த 14 வருடங்களுக்கு முன்பு சுஷாங்க் பரத்வாஜ் என்பவரை அனசுயா திருமணம் செய்தார். அவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். எனினும், தனக்கு 3வது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாகவும், அதற்கு தனது கணவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

எப்போதும் வேலை, வேலை என்று வெளியிடங்களுக்கு சென்று விடுகிறார் என்றும் வருத்தப் பட்டு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ‘குழந்தை இல்லை என்றால், வாழ்க்கையே வீணாகிவிடும். வீடு மகிழ்ச்சியாக இருக்க பெண் குழந்தைகளாக இருக்க வேண்டும்’ என்றார். அனசுயா பரத்வாஜ் தனது தனிப்பட்ட விஷயம் குறித்து பொது இடத்தில் பேசியதும், அவர் பேசிய விதமும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags : Hyderabad ,T. Anasuya Bharatwaj ,Willie ,
× RELATED ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க...