×

சூது கவ்வும் 2 – திரைவிமர்சனம்

குறுக்குவழியில் ராதாரவி முதலமைச்சராகிறார். ஊழல் அமைச்சர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிதி அமைச்சர் கருணாகரன், கட்சிக்கு தனி செயலியின் மூலம் நிதிகளைப் பெற்றுக்கொடுப்பதில் முன்னணியில் இருக்கிறார். கடத்தல் தொழிலை மேற்கொள்ளும் மிர்ச்சி சிவா, எதிர்பாராத நிலையில் கருணாகரனைக் கடத்துகிறார். அரசியலில் மட்டுமின்றி, கருணாகரனின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது. அது என்ன என்பது மீதி கதை.
அப்போது தாஸ் கேரக்டரில் விஜய் சேதுபதி செய்ததையே இப்போது குருநாத் என்ற கேரக்டரில் மிர்ச்சி சிவா செய்திருக்கிறார்.

தனது கேரக்டரை காமெடியாக கையாண்டுள்ள அவர், சில இடங்களில் அதுவே திகட்டுவதை கவனித்திருக்க வேண்டும். கதையின் மையப்புள்ளியான அருமைபிரகாசம் என்ற கேரக்டரில் கருணாகரன் சிறப்பாக நடித்துள்ளார். முழு படத்தையும் தன் தோள்மீது சுமந்திருக்கிறார். வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி ஆகியோரின் அரசியல் கலாட்டாக்களுடன், சினிமா டைரக்டர் அருள்தாஸ் மற்றும் கல்கி, கவி, யோக்ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி ஆகியோரின் நடிப்பு ரசிக்கலாம்.

கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. எட்வின் லூயிஸ் விஷ்வநாத் இசையில் பாடல்களும், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் ஓகே ரகம். படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின் பணியும் குறிப்பிடத்தக்கது. அரசியல் சம்பவங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்கிய எஸ்.ஜே.அர்ஜூன், வசனங்களைக் குறைத்து, வலிமையான காட்சிகளின் மூலம் மிரட்டியிருக்க வேண்டும். முற்பகுதியை விட பிற்பகுதி சற்று விறுவிறுப்பாக இருக்கிறது.

Tags : Radha Ravi ,Finance Minister ,Karunakaran ,Mirchi Siva ,
× RELATED நிதி அமைச்சரின் விளக்கத்தால்...