×

கைவிட்ட பாய்பிரெண்ட்: ஹனிரோஸ் வருத்தம்

தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில் நடித்து வரும் மலையாள நடிகை ஹனி ரோஸ், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ என்ற அமைப்பின் யூ டியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் ஹனி ரோஸ் கூறியிருப்பதாவது: முன்பு எனக்கு ஒரு பாய் பிரெண்ட் இருந்தார். என்னை கைவிட்டு போய்விட்டார். நல்ல பாய் பிரெண்ட் இன்னும் கண்ணில் தென்படவில்லை. என் வாழ்க்கை துணையை நானே தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. வீட்டில் தேர்வு செய்தாலும் அதற்கு சம்மதம் தெரிவிப்பேன். இரவு நேரத்தில் சினிமா பார்க்கும் பழக்கம் எனக்கு இருப்பதால், காலையில் கண் விழிக்க 10.30 மணியாகும். பிறகு ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபடுவேன். பள்ளியில் படிக்கும்போது நாடகங்களில் நடித்துள்ளேன்.

பிறகு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. நான் 7ம் வகுப்பு படித்தபோது, எங்கள் ஊர் தொடுபுழாவில் ‘மூலமற்றம்’ என்ற படத்தின் ஷூட்டிங் நடந்தது. அதை வேடிக்கை பார்க்க சென்றேன். அப்போது அங்கிருந்த ஒருவர், ‘நீ பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறாய். சினிமாவில் நடிக்கிறாயா’ என்று கேட்டார். பிறகு 10ம் வகுப்பு படித்தபோது சினிமாவில் நடித்தேன். தெலுங்கில் `வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. தமிழில் `முதல் கனவே’ உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளேன். போலீஸ் ஆபீசர் வேடத்திலும், ஆக்‌ஷன் படங்களிலும் நடிக்க அதிக ஆர்வம் இருக்கிறது.

Tags : Honeyrose ,Honey Rose ,YouTube ,Amma ,
× RELATED தமிழை விமர்சனம் செய்தாரா? சங்கீதாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்