×

கால்ஷீட் பிரச்னை காரணமாக தெலுங்கு படத்தில் லீலா விலகல்

ஐதராபாத்: தெலுங்கு முன்னணி நடிகையான லீலா, தமிழில் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ேஜாடியாக நடித்து வருகிறார். தவிர தெலுங்கில் அவர் ‘மாஸ் ஜாதரா’, ‘ராபின்ஹூட்’, ‘உஸ்தாத் பஹத் சிங்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு இளம் நடிகர் நவீன் பொலிஷெட்டி, தொடர்ந்து 3 வெற்றிப் படங்கள் கொடுத்தார். சமீபத்தில் அவரது கையில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக நடிப்பிலிருந்து விலகி ஓய்வெடுத்தார்.

தற்போது குணமடைந்துள்ள அவர், நாகவம்சி தயாரிக்கும் ‘அனகனக ஓக ராஜு’ என்ற படத்தில் நடிக்கிறார். மாரி இயக்கும் இதில் ஹீரோ யினாக லீலாவை ஒப்பந்தம் செய்தனர். ஆனால், திடீரென்று ஏற்பட்ட கால்ஷீட் குளறுபடியால் அவரால் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனே இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். தற்போது மீனாட்சி சவுத்ரி நடித்து வருகிறார்.

Tags : Leela ,Hyderabad ,Sivakarthikeyan ,Sudha Kongara ,
× RELATED இந்தி திணிப்பு எதிர்ப்பு கதையில் சிவகார்த்திகேயன்