- எஸ். எஸ் ராஜமௌலி
- பிரியங்கா
- மகேஷ் பாபு
- ஹைதெராபாத்
- பிரியங்கா சோப்ரா
- பாலிவுட்
- ஹாலிவுட்
- விஜய்
- நிக் ஜோனாஸ்
- மால்தி
ஐதராபாத்: முன்னாள் உலக அழகியும், பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடித்து வருபவருமான பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது கணவர் நிக் ஜோனஸ், மகள் மால்டி ஆகியோருடன் வெளிநாட்டில் வசித்து வரும் அவர், ஹாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்துகிறார். இந்நிலையில், எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் பான் வேர்ல்ட் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.
‘இண்டியானா ஜோன்ஸ்’ படத்தைப் போல், உலக அளவிலான மாஸ் ஆக் ஷன் அட்வென்சர் படமாக இது இருக்கும் என்று எஸ்.எஸ்.ராஜமவுலி கூறியுள்ளார். மகேஷ் பாபு கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளனர். அமெரிக்கா, ஆப்பிரிக்கா காடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. 2026 இறுதிவரை படப்பிடிப்பு நடக்கிறது. 2027ல் படம் திரைக்கு வருகிறது.