மும்பை: பத்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சல்மான்கான் நடிப்பில் `சிக்கந்தர்’ என்ற இந்திப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். அவர் கடைசியாக `அகிரா’ என்ற இந்திப் படத்தை இயக்கினார். எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு இந்திப் படத்தை இயக்குகிறார். 2006ல் தெலுங்கில் சிரஞ்சீவி, திரிஷா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய `ஸ்டாலின்’ என்ற படத்தின் இந்தி ரீமேக்தான், சல்மான்கான் நடித்த `ஜெய் ஹோ’ என்ற இந்திப் படமாகும். அப்படம் வெளியாகி 10 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சல்மான்கானை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கி வருகிறார்.
இதற்கு சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அமைத்துள்ளார். இதன்மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், `என்னுடைய வைல்ட் ட்ரீம் தற்போது நிறைவேறியுள்ளது. எனது பாலிவுட் பயணம் `பாய் ஜான்’ சல்மான் கானுடன் தொடங்கி இருக்கிறது. இப்படத்துக்கு நான் பின்னணி இசை அமைத்திருப்பது பெருமை அளிக்கிறது’ என்றார். இப்படத்தில் சல்மான்கான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால் நடிக்கின்றனர். பாடல்களுக்கு பிரீதம் சக்ரவர்த்தி இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார்.