×

வசூலை வாரி குவிக்கும் புஷ்பா 2: 1000 கோடியை நெருங்குகிறது

ஹைதராபாத்: ’புஷ்பா 2’ வசூல் உலக அளவில் 1000 கோடியை நெருங்கி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான திரைப்படம் ’புஷ்பா 2’. புஷ்பா முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததால் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான தொகைக்கு விற்பனை செய்து சாதனை படைத்தனர்.

இப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதேபோல் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது முதல் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியாகி 2 நாட்களில் புஷ்பா முதல் பாகத்தின் வாழ்நாள் சாதனையை முறியடித்தது. அதுவும் தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் புஷ்பா 2 திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. முதல் நான்கு நாள்களில் (ஞாயிற்றுக்கிழமை வரை) மட்டும் ரூ. 829 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிவேகமாக ரூ. 800 கோடி வசூலை கடந்த இந்திய படமாக புஷ்பா 2 உருவெடுத்துள்ளது.

Tags : Hyderabad ,Maithri Movie Makers ,Sukumar ,Allu Arjun ,Rashmika Mandana ,Faqat Faasil ,
× RELATED மழலையர் பள்ளி நடத்தும் சமந்தா