×

‘புஷ்பா 2’ உண்மையான இயக்குனர் யார்?

சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா 1: தி ரைஸ்’ என்ற படத்தை தொடர்ந்து, தற்போது வெளியாகி 1,000 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில், அனுசுயா பரத்வாஜ் நடித்துள்ளனர். ஒரு பாடலுக்கு லீலா கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். பாடல்களுக்கு தேவி பிரசாத் இசை அமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ் அமைத்திருக்கிறார் என்றாலும், பின்னணி இசை என்ற டைட்டில் கார்டில், தேவி பிரசாத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது சாம் சி.எஸ்சுக்கு லேசான மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் பெரும்பாலான காட்சிகளை தான் இயக்கவில்லை என்று சுகுமார் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இத்தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தற்போது வெளியாகி ஹிட்டாகியுள்ள ‘புஷ்பா 2’ படத்தில், கிட்டத்தட்ட 40 சதவீத காட்சிகளை நான் இயக்கவில்லை. எனது இணை இயக்குனர் மன் இயக்கினார்’ என்றார். அவரது பேச்சு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், தனது இணை இயக்குனரின் பெயரை இவ்வளவு ஓப்பனாகப் பேசியிருக்கிறாரே என்று அவருக்கு பாராட்டுகளும் குவிகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பில் சுகுமாருக்கும், அல்லு அர்ஜூனுக்கும் இடையே திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதன் காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சுகுமார் இப்படி பேசியிருப்பது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sukumar ,Allu Arjun ,Rashmika Mandhana ,Bahad Basil ,Sunil ,Anusuya ,
× RELATED வசூலை வாரி குவிக்கும் புஷ்பா 2: 1000 கோடியை நெருங்குகிறது