×

9 ஸ்கின்ஸ் நிறுவன விளம்பரத்தில் மலையாள பாடல்: நயன்தாராவின் நிறுவனத்தை தடை செய்ய வழக்கு

கொச்சி: ஆறு மாதங்களுக்கு முன்பு 9 ஸ்கின்ஸ் என்ற அழகு சாதன நிறுவனத்தை நயன்தாரா தொடங்கினார். அழகு சாதன பொருட்கள், நாப்கின் போன்றவற்றை விற்கும் நிறுவனம் இது. இப்பொழுது இந்த நிறுவனத்திற்கு தடை கேட்டு கேரளாவில் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிறுவனத்தின் பொருட்களை புரோமோஷன் செய்வதற்காக பாடல் ஒன்றை பிரபலமான ஆல்பமான ‘கரிங்காலி’யில் இருந்து பயன்படுத்தியிருந்தார் நயன்தாரா. இப்பாடல் மில்லியன் கணக்கில் பார்வைகளை பெற்று பெரும் சாதனை படைத்த மலையாள பாடலாகும். இப்பாடலை பஹத் பாசில் நடித்த ஆவேஷம் மலையாள படத்திலும் பயன்படுத்தி இருந்தார்கள்.

ஆனால் அதற்கான உரிமம் பெற்று, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தொகை கொடுத்தே அந்த பாடல் வாங்கப்பட்டது. ஆனால் நயன்தாரா தரப்பு அனுமதி வாங்காமல் திருட்டுத் தனமாக இந்த பாடலை தங்களது விளம்பரத்துக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்நிலையில் எங்களிடம் அனுமதி கேட்கவில்லை எனக்கூறி அந்த ஆல்பம் சம்பந்தப்பட்டவர்கள் நயன்தாராவின் மீது கேரளாவில் வழக்கு தொடுத்துள்ளனர். வழக்கு தொடர்ந்தவர்கள், நயன்தாரா நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவது 9 ஸ்கின்ஸ் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என்றும் திருச்சூர் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏற்கனவே ‘நானும் ரவுடிதான்’ படத்தின் பாடல் காட்சியை அனுமதியின்றி தனது ஆவண படத்தில் பயன்படுத்தியதற்காக அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், நயன்தாரா மீது ரூ.10 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் மற்றொரு வழக்கும் தொடரப்பட்டுள்ளதால் இது நயன்தாராவுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : 9 Skins ,Nayanthara ,Kochi ,Kerala ,
× RELATED விக்னேஷ் சிவனை திருமணம் செய்திருக்க கூடாது: நயன்தாரா வேதனை