×

நாக சைதன்யா – சோபிதாவின் திருமண விழா ரூ.50 கோடிக்கு நெட்பிளிக்ஸ் ஒப்பந்தம்

ஐதராபாத்: தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. அவரின் மூத்த மகனான நாக சைதன்யாவும் இளம் ஹீரோவாக பிரபலமாக இருக்கிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்த நிலையில், நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். சமந்தா உடனான திருமண முறிவுக்கு பின்னர் நடிகை சோபிதா துலிபாலா மீது காதல் வயப்பட்டார் நாக சைதன்யா.

வருகிற டிசம்பர் 4ம் தேதி நாக சைதன்யா – சோபிதா ஜோடியின் திருமணம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போதே களைகட்டி உள்ளன. இந்த திருமணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக நடிகர், நடிகைகளின் திருமண நிகழ்ச்சிகளை ஓடிடிக்களுக்கு விற்பது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் கூட நயன்தாராவின் திருமண வீடியோ நெட்பிளிக்ஸில் ஆவணப்படமாக வெளியானது.

இதற்காக நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு ரூ.25 கோடி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாக சைதன்யா – சோபிதா துலிபாலா ஜோடியின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் ரூ.50 கோடி கொடுத்து இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளதாம். இதனால் நாக சைதன்யா – சோபிதா ஜோடியின் திருமணத்திலும் கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் என தெரிகிறது.

Tags : Naga Chaitanya ,Sopita ,netflix ,Hyderabad ,Nagarjuna ,Samantha ,
× RELATED காசி கோயிலில் சாய் பல்லவி சிறப்பு பூஜை: திருமணத்துக்கு தயாராவதாக தகவல்