×

நெஞ்சு பொறுக்குதில்லையே இசையை வெளியிட்ட திருமாவளவன்

சென்னை: ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இசைத் தட்டை வெளியிட்டார். அரவிந்த் ரியோ மற்றும் காளிதாஸ் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். கதாநாயகிகளாக புவனேஸ்வரி ரமேஷ் பாபு, நித்யா ராஜ் அறிமுகமாகிறார்கள். மற்றும் ஜேஷன் கௌசி, சசிகுமார் உட்பட பலர் நடித்துள்ளார்கள். தயாரிப்பாளர் கிறிஸ்துதாஸ் வில்லனாக நடித்துள்ளார். இசை, எம்.எல்.சுதர்சன், பின்னணி இசை, ஜெயக்குமார். ஒளிப்பதிவு, அப்துல் கே. ரகுமான். நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இயக்கியுள்ளனர். விழாவில் திருமாவளவன் பேசியதாவது: காதல் உலகம் முழுக்க இருக்க கூடிய கருப்பொருள். இன்னும் இன்னும் பல ஆயிரம் படங்கள் இந்த கருப்பொருளில் வந்துகொண்டே இருக்கும். இவர்கள் அந்த காதலை வணிக சந்தையாக பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாக பார்க்க வேண்டும். முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும். இப்படத்தை எடுத்த படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.

Tags : Thirumavalavan ,Nenju ,Chennai ,Liberation Tigers of India ,Arvind Rio ,Kalidas ,Bhuvaneshwari Ramesh Babu ,Nithya Raj ,
× RELATED தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என...