×

குடும்பமே சேர்ந்து திரைப்படம் தயாரிக்கும் கதை

சென்னை: யுகே கிரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிக்க, உதய் கார்த்திக் மற்றும் சுபிக்‌ஷா கயா, விவேக் பிரசன்னா, ஜா ரவி, மோகனசுந்தரம், பார்த்திபன் குமார், கவின் நடித்துள்ள குடும்பக்கதை கொண்ட படம், ‘ஃபேமிலி படம்’. இப்படம் குறித்து இயக்குனர் செல்வகுமார் திருமாறன் கூறியதாவது: திரைப்படம் இயக்க வாய்ப்பு தேடி அலையும் உதய் கார்த்திக், தனது லட்சியத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறார். அவருக்கு குடும்பத்தினர் ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர். உதய் கார்த்திக் தனது லட்சியத்தில் ஜெயித்தாரா என்பது கதை.

வில்லன்களே கிடையாது. கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளும், சந்தர்ப்பங்களும் எதிர்மறையாக நிற்க, அவற்றை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது மீதி கதை. சென்னைமற்றும் மதுரையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ‘கேடி கருப்புதுரை’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களுக்கு அனிவி இசை அமைத்துள்ளார். ‘விலங்கு’ வெப்தொடர் மூலம் பிரபலமாகியுள்ள அஜிஷ் பின்னணி இசை அமைத்துள்ளார். அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது.

 

Tags : Chennai ,Uday Karthik ,Subiksha Gaya ,Vivek Prasanna ,Ja Ravi ,Mohanasundaram ,Parthiban Kumar ,Gavin ,K.Balaji ,UK ,Selvakumar Thirumaran ,
× RELATED பேமிலி படம் விமர்சனம்