×

தக் லைஃப் டீசர் வெளியானது: ஜூன் 5ல் படம் ரிலீஸ்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. மேலும், இந்தப் படத்தில் திரிஷா, அபிராமி, நாசர், பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. நேற்று கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி டீசர் வெளியாகி உள்ளது.

அதிரடியான சண்டை காட்சிகளுடன் வெளியான இந்த 45 செகண்ட் டீசரில் தக் லைஃப் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘விண்வெளி நாயகா’ என்ற பாடலும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. அதில், கமல்ஹாசன், சிம்பு தோன்றும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஹெலிகாப்டர் ஷாட், பனி படலத்தில் கமல்ஹாசன் நடந்து செல்வது, ஹோலி காட்சி ஷாட் ஆகியவை மணிரத்னம், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் கூட்டணியின் பலத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளது. ரஹ்மானின் பின்னணி இசையும் மிரட்டலாக உள்ளது. தற்போது இந்த டீசர் ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : Chennai ,Mani Ratnam ,Kamal Haasan ,Simbu ,Trisha ,Abirami ,Nasser ,Pankaj Tripathi ,
× RELATED சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே...