×

கமல்ஹாசனின் தக் லைஃப் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ்

சென்னை: ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ‘தக் லைஃப்’. முக்கிய வேடங்களில் சிம்பு, திரிஷா, கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ளன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, ரவி ேக.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செர்பியா, அயர்லாந்து, ராஜஸ்தான், டெல்லி, கோவா, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

Tags : Kamal Haasan ,Chennai ,Mani Ratnam ,Simbu ,Trisha ,Gautham Karthik ,Joju George ,Aishwarya Lakshmi ,Abhirami ,Nasser ,Madras Talkies ,Rajkamal Films International ,
× RELATED சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே...