×

அஜித் படப்பிடிப்பிலிருந்து வெளியேறினாரா திரிஷா? பரபரப்பு தகவல்

சென்னை: ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பிலிருந்து திரிஷா வெளியேறியதாக பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இதில் அஜித் 3 வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் ஜோடியாக நடித்து முடித்துள்ளார் திரிஷா. இந்நிலையில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் அஜித் ஜோடியாக திரிஷாவே நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதற்காக அஜித், திரிஷா உள்பட படக்குழுவினர் அங்கு முகாமிட்டிருந்தனர். இதற்கிடையே அங்கு படப்பிடிப்பிலிருந்து திடீரென கிளம்பி திரிஷா சென்னைக்கு வந்துவிட்டார்.

ஏதோ பிரச்னை காரணமாகவே அவர் படப்பிடிப்பிலிருந்து வெளியேறியதாக சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து திரிஷாவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் பேசியபோது, திரிஷா ஏற்கனவே ஒரு விளம்பர படப்பிடிப்புக்காக கமிட் ஆகி இருந்தார். அதற்காகவே சென்னை வந்தார். அதை முடித்துவிட்டு அவர் ஸ்பெயினுக்கு திரும்பிச் செல்வார் என தெரிவிக்கப்பட்டது. விஜய்யுடன் ‘லியோ’ படத்தில் நடித்தபோதும் இதேபோல் காஷ்மீர் படப்பிடிப்பிலிருந்து திரிஷா வெளியேறியதாக பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. திரிஷா தற்போது, சிரஞ்சீவியுடன் ‘விஷ்வம்பரா’, மோகன்லாலுடன் ‘ராம்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

Tags : Trisha ,Ajith ,CHENNAI ,Adhik Ravichandran ,
× RELATED எனது மகன் இறந்துவிட்டான் இனி எப்படி நடிப்பேன்? திரிஷா கண்ணீர்