×

ஏரி பணியை எம்எல்ஏ ஆய்வு

பொன்னேரி: பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் ஆரணி ஆற்றங்கரையில் சென்ற ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது உடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்வதற்கு  தமிழக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.5 கோடி 60 லட்சம் மதிப்பீட்டில் பணி செய்ய ஆணை பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை.சந்திரசேகர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆண்டு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன் இதனை சரி செய்வதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது ஆரணியாறு வடிநிலக் கோட்ட உதவிப் பொறியாளர் வெற்றிவேலன், பொதுப்பணித்துறை உதவி அதிகாரிகள் உடன் இருந்தனர்….

The post ஏரி பணியை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : MLA ,Ponneri ,Arani river ,Perumpedu ,Dinakaran ,
× RELATED பொன்னேரி அருகே மனைவியின் தகாத உறவுக்கு உதவிய மாமியார் கொலை; மருமகன் கைது