×

ஏஐ மூலம் திரிஷாவுக்கு முத்தம் தந்த வாலிபர்: ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: ஏற்கனவே சில நடிகைகளின் டீப்ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தற்போது பிரபல நட்சத்திரங்களுடன் இணைந்து டான்ஸ் ஆடுவது போன்ற ஏஐ வீடியோக்களை சிலர் உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் திரிஷாவுக்கு இளைஞர் ஒருவர் லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோட் படத்தில் ஒரு பாடலுக்கு திரிஷா ஆடியிருந்தார். அந்த பாடலில் இருந்த கெட்அப்பில் திரிஷா இருக்கிறார். அவருடன் இருக்கும் வாலிபரை அவர் அணைப்பது போலவும் முத்தம் தருவது போலவும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவின் எடிட்டிங் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபோன்ற வீடியோக்களை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரிஷாவின் ரசிகர்கள் கமென்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

The post ஏஐ மூலம் திரிஷாவுக்கு முத்தம் தந்த வாலிபர்: ரசிகர்கள் அதிர்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Trisha ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எனது மகன் இறந்துவிட்டான் இனி எப்படி நடிப்பேன்? திரிஷா கண்ணீர்