×

மெய்யழகனுக்கு 2 பாடல்கள் பாடிய கமல்

சென்னை: திரையுலகில் பல்வேறு பிரிவுகளில் இயங்கி வரும் கமல்ஹாசன், மற்ற நடிகர்களின் படங்களிலும் சொந்தக்குரலில் பாடி வருகிறார். அந்தவகையில், கார்த்தி நடிக்கும் ‘மெய்யழகன்’ என்ற படத்துக்காக அவர் 2 பாடல்களைப் பாடியிருக்கிறார். விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ என்ற படத்தை தொடர்ந்து ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் எழுதி இயக்கியுள்ள படம், ‘மெய்யழகன்’. இதில் கார்த்தி, ராஜ்கிரண், அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா நடித்துள்ளனர். சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது.

கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். உமாதேவி எழுதியுள்ள ‘யாரோ இவன் யாரோ’, ‘போறேன் நான் போறேன்’ ஆகிய பாடல்களை கமல்ஹாசன் பாடியுள்ளார். இதையடுத்து கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ‘நானும், ஜோதிகாவும் தயாரித்துள்ள ‘மெய்யழகன்’ படத்தின் பாடலுக்கு உங்களின் தனித்துவமான குரலைக் கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி கமல் அண்ணா. உங்களின் அந்த மெல்லிய தொனி, உணர்ச்சிகளின் உலகத்துக்கே அழைத்துச் சென்று, நாஸ்டாலஜியாவாக உணர வைக்கும் மந்திரம் கொண்டது. என்மீதான உங்களின் இந்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி கமல் அண்ணா’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post மெய்யழகனுக்கு 2 பாடல்கள் பாடிய கமல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal ,Meiyazhagan ,Chennai ,Kamal Haasan ,Karthi ,Vijay Sethupathi ,Trisha ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே...