×

நடிகர் பிரதீப் விஜயன் மர்ம சாவு

சென்னை: பூட்டிய வீட்டில் நடிகர் பிரதீப் கே.விஜயன் (40) இறந்து கிடந்தார். ‘தெகிடி’, ‘வட்டம்’, ‘லிஃப்ட்’, ‘இரும்புத்திரை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிரதீப் கே.விஜயன். பல படங்களில் இவர் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். பாலவாக்கத்தில் இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இவரது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டியே இருந்தது. நண்பர்கள் செல்போனில் தொடர்புகொண்டபோதும் இவர் போனை எடுக்கவில்லை.

வீட்டுக்கு நேற்று வந்து கதவை தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, பிரதீப் விஜயன் இறந்து கிடந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாரடைப்பால் அவர் இறந்திருக்கலாம். ஆனாலும் பிரேத பரிசோதனைக்கு பிறகே எதுவும் தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.

The post நடிகர் பிரதீப் விஜயன் மர்ம சாவு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Pradeep Vijayan ,Chennai ,Pradeep K. Vijayan ,Palavakkam ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை பாலவாக்கத்தில் நடிகர் பிரதீப் விஜயன் மரணம்..!!