×

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஏகாதசி பகல்பத்து 6ம் நாள் விழா

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் வரும் 18 ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. அதனையொட்டி கடந்த 5 நாட்களாக கோயிலில் பகல் பத்து, ராப்பத்து நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நடைபெற்று  வரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் ஒரு பகுதியான  பகல்பத்து 6ம் நாளான நேற்று   ராஜகோபால சுவாமி விஜய ராகவ நாயக்கர்  அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மன்னர் விஜய ராகவ நாயக்கர் பெருமாளுக்கு வழங்கிய வைர ஆபரணங்கள் மற்றும் மாராட்டிய அரசர்கள் குறிப்பாக சரபோஜி ராஜா பெருமாளுக்கு வழங்கிய ரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள், சோழர் காலத்தில் ராஜாதி ராஜன் என்கிற சோழ மன்னர் வழங்கிய தங்க கல் பதித்த ஆபரணங்கள் அத்துடன் குவலயா பீடம் என்கிற யானையை வதைத்து அதனுடைய தந்தத்தை இடது பாகத்தில் சாற்றிற்கொண்டு ராம பணத்தை ஏற்றி கொண்டு கோபாலனுக்கே உரிய வேத்திரம் என்கிற சாட்டையை கையில் ஏந்தி அதன் பிறகு லட்சுமி ஆரத்தோடு மகா ராஜாதி ராஜனாக சீர் மிகு ராஜகிரிடம் தரித்து கொண்டு பகல்பத்து 6 ம் நாளன்று சுவாமி விஜய ராகவ நாயக்கர்  அலங்காரத்தில் சேவை தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags : Ekadasi ,festival ,Mannargudi Rajagopala Swami Temple ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...