×

வேற மாறி ஆபீஸ் 2வது பாகம் உருவாகிறது

சென்னை: ஐடி அலுவலகத்தில் நடக்கும் சம்பவங்களையும், பணியாளர்களின் சுமைகளையும் சொன்ன ‘வேற மாறி ஆபீஸ்’ வெப்தொடரின் அடுத்த பாகம் உருவாகிறது. ‘வேற மாறி ஆபீஸ்-சீசன் 2’ என்ற இந்த வெப்தொடர், ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகும். கடந்த சீசனின் தொடர்ச்சியாக, ஜனனி அசோக்குமாரின் தலைமையில் ஒரு ஸ்டார்ட்அப் தொடங்குகின்றனர். பிறகு அந்த நிறுவனம் சந்திக்கும் சவால்கள், பணியாளரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை தொடர் சொல்கிறது.

கனா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகாந்த் தயாரிக்கும் ‘வேற மாறி ஆபீஸ்-சீசன் 2’ என்ற வெப்தொடரை ஜஷ்வினி இயக்குகிறார். முதல் சீசனில் நடித்திருந்த ஆர்.ேஜ விஜய், சவுந்தர்யா நஞ்சுண்டான் ஆகியோருடன் மாறன், ஜனனி அசோக்குமார், ஜெயசீலன், ரவீணா, ஷியாமா, சரித்திரன், விக்கல்ஸ் விக்ரம், பப்பு, ஸ்வப்னா, தாப்பா, விஷ்வா நடிக்கின்றனர். சத்யா ஒளிப்பதிவு செய்ய, ராகவ் இசை அமைக்கிறார். சில நாட்களுக்கு முன்பு பூஜை நடந்தது.

The post வேற மாறி ஆபீஸ் 2வது பாகம் உருவாகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Aha Tamil ,Janani… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED முட்டுவதுபோல் வந்ததால் மாட்டை கண்டு...