×

யஷ் நடிக்கும் டாக்ஸிக் படப்பிடிப்பில் நயன்தாரா

பெங்களூரு: பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘கே.ஜி.எஃப் 1’, ‘கே.ஜி.எஃப் 2’ ஆகிய பான் இந்தியா படங்களின் மிகப்பெரிய ஹிட்டுக்குப் பிறகு புதுப்படத்தில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்த கன்னட முன்னணி ஹீரோ யஷ், தற்போது ‘டாக்ஸிக்’ என்ற பான் இந்தியா படத்தில் ஒப்பந்தமாகி, மிகப்பெரிய டான் கேரக்டரில் நடித்து வருகிறார். இதை மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். ஹீரோயினாக பாலிவுட் முன்னணி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.

யஷ் சகோதரி கேரக்டரில் கரீனா கபூர் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவரது கால்ஷீட் கிடைக்காத நிலையில், இப்படத்தில் இருந்து அவர் விலகிவிட்டார். இதையடுத்து அந்த கேரக்டரில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். வில்லியாக ஹூமா குரேஷி நடிக்கிறார்.  இப்படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து 200 நாட்கள் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்தியாவில் 50 நாட்களும், இங்கிலாந்தில் 150 நாட்களும் படப்பிடிப்பு நடக்கிறது. ஆங்கில திரில்லர் தொடரை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது என்று கூறப்படும் நிலையில், தற்போது நடக்கும் ‘டாக்ஸிக்’ ஷூட்டிங்கில் நயன்தாரா பங்கேற்று நடித்து வருகிறார்.

The post யஷ் நடிக்கும் டாக்ஸிக் படப்பிடிப்பில் நயன்தாரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayanthara ,Yash ,Toxic ,Bengaluru ,India ,Prashant Neel ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அதர்வா தம்பி பட விழாவில் நயன்தாரா! - Nayanthara Speech at Nesipaya First Look Launch | Dinakarannews