×

பிரபாஸ் கல்யாணம் பண்ணிக்காதது ஏன்? ராஜமவுலி புது பதில்

ஐதராபாத்: பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து ராஜமவுலி விளக்கம் தந்துள்ளார். ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’ படங்களுக்கு பிறகு பிரபாஸ், பான் இந்தியா நடிகராக மாறினார். அவர் நடித்து வரும் படங்கள் அனைத்தும் பல மொழி படங்களாக உருவாகி வருகின்றன. 45 வயதாகும் பிரபாசுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. பலமுறை அவரிடம் திருமணம் குறித்து மீடியாவினர் கேள்வி கேட்டுள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் அவர் மழுப்பலாகவே பதில் கூறி வந்துள்ளார்.

தற்போது, பிரபாஸ் நடிப்பில் ‘கல்கி 2898 ஏடி’ என்கிற படம் ஜூன் 27ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ராஜமவுலியிடம் பிரபாஸ் திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு ராஜமவுலி பதில் கூறும்போது, ‘பிரபாஸுக்கு சோம்பேறித்தனம் அதிகம். திருமணம் செய்வதிலும் சோம்பேறியாக இருக்கிறார். ஒரு பெண்ணை தேடி கண்டுபிடித்து அவரின் பெற்றோரிடம் பேசுவது அவருக்கு அதிக வேலையாக இருக்கும். அதனால் தான் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என நினைக்கிறேன்’ என கூறியுள்ளார்.

The post பிரபாஸ் கல்யாணம் பண்ணிக்காதது ஏன்? ராஜமவுலி புது பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prabhas ,Rajamouli ,Hyderabad ,India ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நான் திருமணம் செய்தால் அவங்க மனம் புண்படும்: பிரபாஸ் பளிச்