×

நான் திருமணம் செய்தால் அவங்க மனம் புண்படும்: பிரபாஸ் பளிச்

ஐதராபாத்: நான் திருமணம் செய்தால் அவர்கள் மனம் புண்படும். அதனால் இப்போதைக்கு திருமணம் செய்ய மாட்டேன் என்றார் பிரபாஸ். 45 வயதாகும் பிரபாஸ் இதுவரை திருமணம் செய்யாமல் இருக்கிறார். அவர் நடிகை அனுஷ்காவை காதலிப்பதாகவும் அவருக்காகவே காத்திருப்பதாகவும் பேசப்படுகிறது. இந்த திருமணத்துக்கு சில தடைகள் இருப்பதாகவும் அதனாலேயே 40 வயதை கடந்த பிரபாசும் அனுஷ்காவும் திருமணம் செய்துகொள்ளாமலே காலம் கடத்துவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரபாஸ் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபாசிடம் இது பற்றி கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறும்போது, ‘சமீபத்தில் ஒரு பதிவை நான் போட்டிருந்தேன். நமது வாழ்க்கையில் ஒருவர் வருகிறார் என்பதுதான் அந்த பதிவு. என் வாழ்க்கையில் ஒருவர் வருகிறார் என சொல்லியிருந்தால் எனது திருமணம் பற்றி நான் சொல்கிறேன் என நீங்கள் கேட்கலாம். பொதுவாக நான் சொன்னதை மீடியா வேறு மாதிரியாக நினைத்துவிட்டது. ரசிகர்களும் அப்படியே நினைத்தார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்போதைக்கு எனக்கு திருமணம் கிடையாது. காரணம், எனக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கிறார்கள். நான் திருமணம் செய்தால் அவர்களது மனம் புண்படும்’ என்றார்.

The post நான் திருமணம் செய்தால் அவங்க மனம் புண்படும்: பிரபாஸ் பளிச் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prabhas Palich ,Hyderabad ,Prabhas ,Anushka ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பிரபாஸ் கல்யாணம் பண்ணிக்காதது ஏன்? ராஜமவுலி புது பதில்