×

இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்

திருவனந்தபுரம்: மலையாள வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இயக்குனராக அறிமுகமாகும் ‘பனி’ என்ற மலையாளப் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பர்ஸ்ட் லுக்கை சிம்பு வெளியிட்டார். ஜோஜூ ஜார்ஜ், சிம்பு இருவரும் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், திரிஷா நடிக்கும் ‘தக் லைஃப்’, சூர்யாவுடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கேரளாவிலுள்ள திருச்சூரில் இரண்டு கும்பல்களுக்கு இடையே நடக்கும் போட்டியை மையமாக வைத்து ‘பனி’ என்ற படம் உருவாகிறது. இதில் ‘நாடோடிகள்’ அபிநயா ஹீரோயினாக நடிக்கிறார். விஷ்ணு விஜய், சாம் சி.எஸ் இணைந்து இசை அமைக்கின்றனர்.

The post இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jojo Jorge ,Thiruvananthapuram ,Joju George ,Simbu ,JoJo George ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்