×

ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓடும் பேருந்தில் கண்டக்டர் படிக்கட்டு அருகே நின்று பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஏறிய நபர் ஒருவர் இருக்கையில் அமராமல் படிக்கட்டு அருகே நின்று கொண்டு இருந்தார்.

அதிவேகத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த பயணி எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி பின்புறமாக பேருந்து கதவு மீது சாய்ந்தார். இதனால் கதவு திறந்து அந்த நபர் கீழே விழு இருந்தார். அப்போது சுதாரித்து கொண்ட கண்டக்டர் ஒரு கையால் அவரைப் பிடித்து மேலே இழுத்தார். பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ, சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post ஓடும் பஸ்சிலிருந்து கீழே விழ இருந்த வாலிபரை காப்பாற்றிய கண்டக்டர் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kerala ,
× RELATED கேரளாவில் பள்ளம் தோண்டியபோது...