×

மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்

சென்னை: நடிகர் அர்ஜுன் தாஸ், கார்த்தி நடித்த ‘கைதி’, விஜய்யின் ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தார். அதன் பிறகு வசந்தபாலன் இயக்கிய ‘அநீதி’, சாந்தகுமார் இயக்கிய ‘ரசவாதி’ ஆகிய படங்களின் மூலம் ஹீரோவாக மாறினார். இப்போது மலையாளத்திலும் நடிக்கிறார். நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘லூசிஃபர்’. இதன் அடுத்த பாகம் ‘எம்புரான்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இதில் மோகன்லால், சுராஜ் வெஞ்சரமூடு, ஷான் டைம் சாக்கோ உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதில் அவர் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் பிசியாக நடித்து வரும் அவர், அடுத்தடுத்து மலையாள படங்களிலும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

The post மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arjun Das ,CHENNAI ,Karthi ,Vijay ,Vasanthapalan ,Shanthakumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சிவகங்கையில் காங்கிரஸ் வெற்றி காமராஜர் சிலைக்கு மரியாதை