×

சிவகங்கையில் காங்கிரஸ் வெற்றி காமராஜர் சிலைக்கு மரியாதை

சிவகங்கை, ஜூன் 7: சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு நகர் காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

மாவட்ட துணைத் தலைவர் சண்முகராஜன், நிர்வாகிகள் சிதம்பரம், வெள்ளைச்சாமி, மோகன்ராஜ், பழனிச்சாமி, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் இமய மடோனா, வட்டார பொறுப்பாளர் உடையார், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சையது இப்ராகிம், நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஷ்குமார், பிரியங்கா, மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கியசாந்தா ராணி, சிவாஜி பேரவை தமிழரசன், சீனிவாசன், அருள்ஜோதி, லெட்சுமணன், கண்ணன், ஆறுமுகராஜா, விக்னேஸ்வரன், முத்துவடிவேல், ஜெகன்கருப்பையா, சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post சிவகங்கையில் காங்கிரஸ் வெற்றி காமராஜர் சிலைக்கு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Congress ,Sivaganga ,Kamaraj ,Sivagangai ,Karthi Chidambaram ,Nagar Congress ,President ,Vijayakumar ,
× RELATED கல்லூரி மாணவர்களுக்கு கல்வெட்டு பயிற்சி