×

விஜயகாந்த் நடிக்க இருந்த வேடத்தில் சத்யராஜ்

சென்னை: இன்ஃபினிட்டி பிலிம் வென்சர் தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், முரளி சர்மா, இயக்குனர் ரமணா நடித்துள்ள படம், ‘மழை பிடிக்காத மனிதன்’. அச்சு ராஜாமணி இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, ‘இப்படம் மறைந்த விஜயகாந்த் சாருக்கு டிரிபியூட்டாக இருக்கும்.

கடந்த 2021ல் படப்பிடிப்பு தொடங்கியபோது, இதில் விஜயகாந்த் நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். ஆனால், அவரது உடல்நிலை காரணமாக அது நடக்கவில்லை. அவரைப் போன்ற மகா நடிகர் சத்யராஜ் சாரிடம் அந்தக் கேரக்டருக்கு கேட்டோம். உடனே ஒப்புக்கொண்டார்’ என்றார்.

சத்யராஜ் பேசும்போது, ‘ஒவ்வொருவருக்கும் ஒரு டிரேட் மார்க் இருப்பது போல், எனக்கு நக்கலும், நையாண்டியும் படத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதோடு, வில்லத்தனம் கலந்து வந்தால், இனி என் கொள்கையைத் தளர்த்தி வில்லனாக நடிக்க முடிவு செய்துள்ளேன். என் நடிப்புத்திறமைக்கு தீனி போட்ட இயக்குனர்கள் மணிவண்ணன், பி.வாசு, பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு நன்றி’ என்றார்.

The post விஜயகாந்த் நடிக்க இருந்த வேடத்தில் சத்யராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sathyaraj ,Vijayakanth ,Chennai ,Infinity Film Venture ,S. D. ,Vijay Milton ,Vijay Antani ,Sarathkumar ,Satyaraj ,Mega Akash ,Murali Sharma ,Ramana ,Achu Rajamani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொலையாவட்டத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா